பாடகர் செல்லப்பா பிறந்த நாள்

தமிழீழ பாடகரான தேனிசை செல்லப்பா
Spread the love

பாடகர் செல்லப்பா பிறந்த நாள்

பாடகர் செல்லப்பா பிறந்த நாள் ,உலக மக்கள் பாசறை பானர் தேனிசை செல்லப்பாவின் 83 வது பிறந்த நாளை கொண்டாடிவருகின்றனர் .

தனது மதுர குரலினால் பாட ஆரம்பித்து மக்கள் விடுதலைக்கு தனது மதுர குரல் ஊடாக பாடி வளம் சேர்த்தவர் .

அவ்வாறான தேனிசை செல்லப்பா அவர்களின் வீரமிகு அகவை நாள் இன்றாகும் .

தமிழீழ பாடகரான தேனிசை செல்லப்பா

தமிழீழ விடுதலை அமைப்பை கட்டியமைத்து ,மக்கள் விடுதலைக்கு போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன், இந்தியாவில் தங்கி இருந்த கால பகுதியில் ,

தமிழீழ பாடகரான தேனிசை  செல்லப்பா

ஐயா செல்லப்பா தொடர்பாக அறிகிறார் ,அதனை அடுத்து தமது போராளி தளபதிகள் ஊடக அணுகி, அவரை எமது இயக்கத்தின் பாடகராக அறிமுகம் செய்கின்றனர் .

அன்றில் இருந்து இன்றுவரை எதுவித சமரசமும் இன்றி ,ஐயா ஈழ தமிழ் விடியலுக்கு தனது குரலை வழங்கி உயிர் கொடுத்து வருகிறார் .

தளராத மதுக்குரல் தேனிசை செல்லப்பா

ஈழ மக்களுக்கு தளராத குரல் ஊடாக வீரம் ஊட்டி வந்த ஐயா செல்லப்பாவுக்கு ,விடுதலை புலிகளினால் பாசறை பானர் ,தேனிசை செல்லப்பா என்கின்ற உயர் கவுரவுத்துடன் அவரை அழைக்கின்றனர் .

அன்றில் இருந்து தமிழ் மக்கள் நெஞ்சங்களில் செல்லப்பா ,தேனிசை செல்லப்பாவாக நெஞ்சங்களில் உறைவிடம் ஆகி விட்டார் .

அவ்வாறு செல்லப்பா மீதும் அம் மக்கள் அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளனர் .

தமிழீழ பாடகரான தேனிசை  செல்லப்பா
பாடகர் செல்லப்பா பிறந்த நாள்

லண்டனில் செல்லப்பா பாட அழுத மக்கள்

தடைகள் விலக்க பட்டு செல்லப்பா முதன் முதலாக லண்டன் வருகை தந்தார் ,.பல இடங்களில் லண்டனில் இசை கச்சேரி நடத்த பட்டது .

அப்பொழுது அரங்கம் நிறைந்த அந்த மண்டபத்தில் செல்லப்பா அவர்கள் உயிர் கொடுத்து பாடி கொண்டிருக்கும் பொழுது ,அவர் பாட அழுத மக்கள் நினைவுகள் இன்றுவரை என் நினைவில் உள்ளது .

அந்த மக்கள் அழுகின்ற காட்சியை காணொளி பிடித்து வெளியிட்டு இருந்தேன் .

இது தேனிசை செல்லப்பா மீது மக்கள் கொண்டிருந்த அளவு கடந்த நேசத்தின் சாட்சியாக உள்ளது .

அந்த அரங்கத்தில் இளங்கோ செல்லப்பா இசை அமைக்க ,தேனிசை செல்லப்பா ,மற்றும் இளங்கோ செல்லப்பா மனைவி ஆகியோர் பாடினர் .

வரலாற்றில் அழியாத இடம் பிடித்து சாதித்து ,சாதனையாளனாக நிற்கும் தேனிசை செல்லப்பா மக்களினால் கொண்டாட படுவார் .அவர் நினைவுகள் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் தமிழரோடு நிலைத்து நிற்கும் .

அவ்வாறான அந்த மாசற்ற புனித மகனின் பிறந்த நாளில் எதிரி இணையமும் அவரை நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது .

ஆக்கம் – வன்னி -மைந்தன் –