பாசிப் பருப்பு அல்வா 10 நிமிடத்தில் சுவையான அல்வா செய்யலாம் வாங்க

பாசிப் பருப்பு அல்வா 10 நிமிடத்தில் சுவையான அல்வா செய்யலாம் வாங்க
Spread the love

பாசிப் பருப்பு அல்வா 10 நிமிடத்தில் சுவையான அல்வா செய்யலாம் வாங்க

பசி பருப்பு பயன் படுத்தி 10 நிமிடத்தில் தரமான சுவையில் அல்வா செய்திடலாம் வாங்க .இந்த பாசி பருப்பு வைத்து ரெம்ப இனிப்பான அல்லவா செய்வது எப்படி என்பதை ,செய்முறை விளக்கத்துடன் பார்க்கலாமா வாங்க .

அல்வா செய்வது எப்படி ….?
இனிப்பு அல்வா செய்திட தேவையான பொருட்கள் .

இனிப்பு அல்வா செய்முறை ஒன்று

இந்த அல்வா செய்திட ஒரு கப் அளவு பாசி பருப்பு எடுத்து தண்ணி ஊற்றி ,நன்றாக கழுவி எடுத்திடுங்க .
மூன்று தடவை தண்ணி மாற்றி மாற்றி கழுவி எடுத்திருங்க .

இப்போ அடுப்பில கடாய் வைத்து வைத்தில கழுவி எடுத்த பாசி பருப்பை போட்டு வறுத்தெடுங்க .


நன்றாக வறு பட்டதும் ,இப்போ அடுப்பில் இருந்து எடுத்து ஆற வைத்து ,மிக்சியில் போட்டு அரைத்து எடுத்திருங்க .

பாசிப் பருப்பு அல்வா 10 நிமிடத்தில் சுவையான அல்வா செய்யலாம் வாங்க

அதன் பின்னர் மீளவும் அடுப்பில கடாய் வைத்து, சட்டியை சூடாக்கி ,இரண்டு கரண்டி நெய் சூடானதும் முந்திரி பருப்பு போட்டு ,வறுத்து எடுத்து வைத்திடுங்க .

அதன் பின்னர் அதே நெய்யில் வெள்ளை ரவை ,கடலை மாவு போட்டு, நன்றாக வறுத்தெடுங்க .அதன் பின்னர் அரைத்த பாசி பருப்பை நன்றாக கலக்கி வறுத்திடுங்க .

இப்போ தேவையான அளவு தண்ணி ஊற்றி நனறாக கலந்து வாங்க .

அதன் பின்னர் இரண்டு கப் அளவு சர்க்கரை சேர்த்து கலந்து விடுங்க .இப்போ இது கூட இரு கரண்டி நெய் சேர்த்து நன்றாக கலக்கி விடுங்க .நம்ம எதிர் பார்த்த அல்வா பதத்திற்கு ரெடியாகிடிச்சு .இரண்டு ஏலக்காய் பவுடர் ,முந்திரி பருப்பு சேர்த்து கலக்கி ,அதனை இறக்கிடுங்க .

இப்போ நமக்கு சுவையான தரமான இனிப்பு அல்வா ரெடியாகிடிச்சு .

இந்த அல்வாவை ஒரு டீ கூட சேர்த்து சாபிடுஙக .சிறுவர்கள் முதல் ,குழந்தைகள் வரை விரும்பி கேட்டு சாப்பிடுவாங்க.

Leave a Reply