பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் நிதி அகர்வால்

Spread the love

பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் நிதி அகர்வால்

தெலுங்கு நடிகையான நிதி அகர்வால், ஜெயம் ரவியின் பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சுசீந்திரன்

இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அவர் தமிழில் நடித்த

இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக

தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நிதி அகர்வால், பவன் கல்யாண்

இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நிதி

அகர்வால். அந்த வகையில், தெலுங்கில் உருவாகும் ஒரு வரலாற்று படத்தில்

பவர்ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார்.

இப்படத்தை சிம்புவின் வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார்.

முதன்முறையாக பவன் கல்யாணுடன் நடிக்கவுள்ளதால், நடிகை நிதி அகர்வால் உற்சாகத்தில் திளைத்துப்போய் உள்ளாராம்

Leave a Reply