பத்தாயிரம் ரூபா உதவி தொகை

பத்தாயிரம் ரூபா உதவி தொகை
Spread the love

பத்தாயிரம் ரூபா உதவி தொகை

பத்தாயிரம் ரூபா உதவி தொகை ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க படுகிறது .

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக ஆளும் அரசு தெரிவித்துள்ளது .

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அரச அதிகாரிகள் அந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்ற மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .

அதிகம் மழை வீழ்ச்சி

அதிகம் மழை வீழ்ச்சி காரணமாக குளங்கள் நிரம்பி வழிந்ததால் வான் உடைத்து வெள்ளம் பாய்ந்ததில்,தாழ் நில பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன .

இந்த வெள்ளத்தினால் லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டனர் .

அதனை எடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் திருத்தம் செய்வதற்கும் அதனை சுத்தம் செய்வதற்குமாக இலங்கை ஆளும் அரசினால் தற்பொழுது இந்த 10,000 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் மக்களை குஷி படுத்த ,தற்பொழுது இவ்விதம் அரசு பத்தாயிரம் ரூபாய் நிதிகளை வழங்கிவருகிறது .

அந்த மக்களை குசி படுத்தி அவர்களது வாக்கு வங்கிகளை சுருட்டிக்கொள்ளவே , இவ்வாறு நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துக்கொண்டனர்.