பதில் சொல்

பதில் சொல்
Spread the love

பதில் சொல்

இதயம் கனக்கும் வேளையிலே
இதயம் உன்னை தேடுகிறேன்
மழையாய் பொழியும் கண்ணீரால்
மலைமகள் உன்னால் வாடுகிறேன்

நெருங்கி உன்னை நேசிக்கையில்
நெஞ்சே இதயம் உடைக்கின்றாய்
வலிகளை தினம் எனக்களித்து
வாட ஏனோ வைக்கின்றாய்

அழுவதால் உனக்கு மகிழ்வென்றால்
அல்லும் பகலும் அழுகின்றேன்
தொழுவதால் உனக்கு மகிழ்வென்றால்
தொடராய் உன்னை தொழுகின்றேன்

விடை பெறு என்றேன் விரட்டுகிறாய்
விரிசலை ஏனோ விரிக்கின்றாய்
உறவை உடைக்க முனைவதாலோ
உள்ளமே என்னை உதைக்கின்றாய் ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-06-2024