பதில் சொல்

Spread the love

பதில் சொல்

இரவுகளை மட்டும்
இரவல் கேட்கிறாய்
இது தான்
இன்றுந்தன் காதலா

உன் இச்சை தீர்ந்ததும்
உதறி போனாயே
காதல் என்ற போர்வையில்
கண்ணீரை ஏன் தந்தாய்

சுகமான காதலை
சுமையாக்கி போனாயே
என்னை கொன்றிட தான்
எமனாகி வந்தாயா

தேடி வந்த போதெல்லாம்
தேய் பிறையை தேய்ந்தேனே
காலாவதி ஆகினேனோ
கழித்து விட்டு போனாய்

03-09-2022

Leave a Reply