கடவுளே பதில் சொல் …!

Spread the love

கடவுளே பதில் சொல் …!

வாழ வழியில்ல
வயிற்று பசி தீரவில்ல ….
ஒரு சான் வயிற்றுக்கு
ஒருவேளை உணவு இல்ல …

என் வலியை நான் போக்க
ஏது செய்வேன் எனை தேக்க …?
தூங்கவே முடியவில்ல
துட்டுக்கு வழி ஏதுமில்ல …

என் உடலை நான் விற்க
எனக்கு வேறு வழியில்ல ..
என் குடும்பம் வாழ்ந்திடவே
எனக்கு வேறு தெரியவில்ல …

கண்டவனும் வந்தின்று
காசு வீசிறான் ….
கண்ணீர் காணா
கன்னி தின்று போகிறான் …

கவலையில நான் அழுது
கண் மூடி தினம் மடிய ,,,,,
எச்சத்தை அவன் முடித்து
ஏறிகின்ற பணம் பிடித்து …

ஒரு குடும்பம் வாழ்கிறது
ஒருத்தி உயிர் அழிகிறது …
பொல்லாத நோய் வாங்கி
பெருத்து உடல் கிழிகிறது ….

இல்லாத நிலை ஒன்றால்
இறப்பை நான் வாங்கி விட்டேன் …..
பொல்லாத ஆட்சிகளால்
பொன் வாழ்வை தொலைத்து விட்டேன் …

என் இறைவா என் இறைவா
எனக்கு மட்டும் ஏன் இறைவா …
இத்துயரை நீ திணித்தாய் ..?
இன்னுயிரை ஏன் பிழிந்தாய் …?

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -20/03/2019

Home » Welcome to ethiri .com » கடவுளே பதில் சொல் …!

Leave a Reply