பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்
Spread the love

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர் ,இலங்கையில் தமபலகாமம் காவல்துறை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .

இவர்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் மொட்டாக்கு போட்டுக்கொண்டு தப்பிக்க சென்ற நிலையில் ,பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாது 36 வயதுடைய மகள் குறித்த நபருக்கு கடனை பணமாக வழங்கியுள்ளார் .

பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட பெண்ணுக்கு வெட்டு

அந்த பணத்தை திருப்பித் தருமாறு குறித்த பெண் இவரிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் .

எனவே அந்த பணத்தினை திருப்பிக் கொடுக்க முடியாத பெரும் வறுமை நிலையில் காணப்பட்டதனால், ஆத்திரமுற்ற அவர் வேறு வழியின்றி குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று கத்தியால் அவர்களை வெட்டி தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதனாலையே 31 வயது பெண்ணும் தாயாரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கொடுத்த கடனை கேட்கச் சென்ற பெண்ணுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய நபர் ,குடும்பஸ்தர் என தெரியவருள்ளது .

போதிய அளவு வருமானமின்மையால் குறித்த பணத்தினை திருப்பி வழங்க முடியாத நிலையில் ,இந்த தாக்குதலை நடத்தியதாக சில செய்திகள் இப்படியும் தெரிவிக்கின்றன.