படிக்க துடிக்கும் புத்தகம் நீ

படிக்க துடிக்கும் புத்தகம் நீ
Spread the love

படிக்க துடிக்கும் புத்தகம் நீ

படிக்க துடிக்கும் புத்தகம் நீ
பக்கங்கள் புரளும் பக்கம் நீ
எண்ணத்தை தூண்டும் எண்ணம் நீ
எழுத வைத்த கவிதை நீ

இப்படி எழுததென உரைத்தவள் நீ
இதயம் உள்ளே துடிப்பவள் நீ
படிக்க படிக்க பிடித்தவள் நீ
பார்வைகள் தேடும் பாவை நீ

காற்றில் கரையும் கற்பனை நீ
காலத்தால் அழியா காவியம் நீ
கவிதைக்குள் புதுமை செய்தவள் நீ
காதல் செய்திட வைத்தவள் நீ

எப்படி மறப்பேன் உன்னை நானோ
எதுகை மோனையை எறிவேனோ
வித்தகி இன்று நீ தானே
விவாகம் செய் என்னை மானே .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-06-2024