பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்

பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்
Spread the love

ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்

பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்,மினி ஆப்பம் இப்படி நீங்களும் சுவையாக செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

வாயுக்கு சுவையாக இலகுவாக வீட்டில் கடை சுவையில் மினி ஆப்பம் செய்வது எப்படி ,அந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம். வாங்க மினி ஆப்பம் செய்முறைக்குள்ள போகலாம் .

மினி ஆப்பம் செய்வது எப்படி

ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள் என்ன ..?இந்த ஆப்பம் செய்திட இரண்டு கப் பச்சை அரிசி எடுத்து பாத்திரத்தில் போட்டு அரசியை நன்றாக கழுவி எடுங்க .

பச்சை அரிசியை நன்றாக கழுவி எடுத்து, பின்னர் நல்ல தண்ணி விட்டு அரை மணிநேரம் நன்றாக ஊற வைத்திடுங்க .

அரை மணி நேரம் முடிந்ததும் ,அரிசியை தண்ணியை வடிச்சிட்டு மிக்சியில போடுங்க ,அதுகூடவே வடிச்ச சாதம் ஒரு கப்பு சேர்த்திடுங்க .

மேலும் துருவிய தேங்காய் ஒரு கப் ,தேவையான அளவு உப்பு ,கூடவே தேவையான அளவு தண்ணி விட்டு ஆப்பம் மாவு அரைத்து எடுத்திடுங்க .அப்புறம் கொஞ்சமா தண்ணி விட்டு மிக்ஸ் பண்ணிடுங்க .

தோசைமாவு போல அதிகமா ஆப்பம் மாவு திக்கா இருக்கனும் ,இப்போ மூடி ஒரு இரவு முழுவதும் நன்றாக புளிக்க வைத்திடுங்க .

இப்போ பொங்கி வந்த ஆப்பம் மாவை நன்றாக மீள கலக்கி விடுங்க .இப்போ பஞ்சு போல ஆப்பம் செய்ய ஆப்பம் மாவு ரெடியாகிடிச்சு .

மினி ஆப்பம் செய்வது எப்படி

செய்முறை ஆப்பம் இரண்டு

அடுப்பில் மினி ஆப்பம் சுடும் கல்லை வைத்து ,நன்றாக சூடாகி வந்ததும் எண்ணெய் தடவி ,இப்போ அந்த மினி அப்பம் செய்ய தேவையான அளவிற்கு கரண்டியால, மாவை கல்லில் ஊற்றிடுங்க .

மினி ஆப்பம் கல்லில் அரை கரண்டி மாவு ஊற்றி அந்த கல்லில் கரை பக்கத்தை கரண்டியால் தடவி விடுங்க .அப்பொழுது ஆப்பம் கரைகள் மொறு மொறுன்னு நன்றாக வந்துவிடும் .

மெல்லிய தணலில் நன்றாக சூடாகி வந்ததும் மினி ஆப்பத்தை இறக்கிடுங்க ,குட்டியான சுவையான மிருதுவான ஆப்பம் கடை சுவையில் ரெடியாடிச்சு .

இந்த அப்பம் கூட உங்களுக்கு புடிச்ச சட்னியை வைத்தும் சாப்பிட்டுக்கலாம் ,பால் விட்டு ஆப்பம் செய்ய விரும்[புருவங்கள் பாலில் சீனியை கலந்து செஞ்சு பாருங்க ,பால் ஆப்பம் போல வந்திருக்கும் .

பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்
பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்

அவவ்ளவு தாங்க கடை சுவையில் இலகுவான முறையில் வீட்டில் பஞ்சு போன்ற சுவையான ஆப்பம் ரெடியாடிச்சு .