நொறுங்கிய இராணுவ விமானம்

நொறுங்கிய இராணுவ விமானம்
Spread the love

நொறுங்கிய இராணுவ விமானம்

விழுந்து நொறுங்கிய இராணுவ விமானம் ,ஜோஜோர்ஜியா நாட்டு இராணுவத்தினுடைய எஸ் சு 25 ரக அதி உச்ச உயரடுக்கு பாதுகாப்பு கொண்ட போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது .

இவ்வேளை இந்த விமானத்தை செலுத்தி சென்ற விமானி, சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக ஜோர்ஜியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது

இந்த விமானம் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதே பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தில் ஏற்பட்ட நடவடிக்கை காரணமாகவே இந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்த ராணுவ கட்டமைப்பு தெரிவித்துள்ளது .

ஆனால் படைத்துறை தகவல் இந்த விமானம் சதியின் ஊடாகவே விழுந்து நெருங்கி உள்ளதாக இப்படியும் தெரிவிக்கின்றது.

எது எப்படியோ விமானம் விழுந்துள்ளது அந்த நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், விமான விபத்தில் பலியான விமானியின் குடும்பத்திற்கு ஆதரவும் ,அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர் .

விமான விபத்து தொடர்பாக பல்வேறுபட்ட சந்தேகம்

இந்த விமான விபத்து அந்த நாட்டின் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

விபத்து தொடர்பாக பல்வேறுபட்ட நாடுகளில் இவ்வாறான விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்ற சம்பவத்தின் பின்புலத்தில், உலக நாட்டு உளவுத்துறையில் மிக முக்கிய சக்திகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

புதிய விபரங்கள் ஆதாரங்களுடன் தெரிவிக்கின்ற பொழுதும் , மக்களுடைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஒரு இணக்கப்பட்ட தீர்ப்பு கிடைக்கப்பெறும் என நம்பப்படுகிறது .

தற்பொழுது இறந்த விமானியின் இறுதி நல்லடக்க நிகழ்வை நிறைவேற்றும் நடவடிக்கையில், அந்த நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.