நைஜீரியாவில் பயங்கர விபத்து 48 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் பயங்கர விபத்து 48 பேர் உயிரிழப்பு ,நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது லொரி ஒன்று மோதி வெடித்துச் சிதறியதில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நைஜர் மாகாணம் அகெயி நகரில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொரி மீது மற்றொரு லொரி மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில், நேற்று எரிபொருள் ஏற்றிக்கொண்டு லொரி சென்று கொண்டிருந்தது.
அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லொரி எரிபொருள் ஏற்றிச்சென்ற லொரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 லொரிகளும் வெடித்து சிதறின. இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புக்குழுவினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது