நான் வாழ -நீ வந்தா போதும் …..!

Spread the love

நான் வாழ -நீ வந்தா போதும் …..!

ஆழி பேரலையா
அடி மனசு சுத்துதடி …
ஆளு மிரளும் பேயா
அடி உன் நினைவு கத்துதடி …

பக்கம் வந்தா போதும் – நான்
பளிங்கா மிளிருவேன் …
தூக்கதில ஒழுகும் நிலவா – உன்னை
துரத்தி வருவேன் ….

வெட்கமில்லை சொல்ல எனக்கு – அடி
வேணும் நீ எனக்கு ….
என்ன விலை சொல்லு
எண்ணி கட்டிடுவேன் பில்லு ….

காற்று போல தட்ட
கரைகிறேன் பனியா …
மூச்சு முட்ட பேச
முன்னே தவிக்கிறேன் தனியா …

என்ன வேணும் சொல்லு
ஏற்று வாங்கி தருவேன் நானு …
நீ வந்தா போதும்
நிலவே நீ என் தேனு ….

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -22/03/2019

Home » Welcome to ethiri .com » நான் வாழ -நீ வந்தா போதும் …..!

Leave a Reply