நீ மறந்தால் … நான் இறப்பேன் ….!

Spread the love

நீ மறந்தால் நான் இறப்பேன் ….!

உன்னால் இதயம் வலிக்குதடி
உலகே உன்னால் துடிக்குதடி ….
ஒருமுறை உந்தன் இதயம் தா
ஓராயிரம் ஆண்டு நான் வாழ்வேன் …

ஆசை வைத்தேதன் பூங்குயிலே
அழகாய் உரசு என் மயிலே …
தேடுது உன்னை என் மனது
தேகம் வந்து மோதி விடு …..

நினைவுகள் உன்னை நீட்டையிலே
நித்தம் நித்தம் தவிக்கின்றேன் ….
ஆசை வந்து தாலாட்ட
அந்தோ காற்றாய் அலைகின்றேன் ….

கூடு வந்து நீ உறைந்தால்
குலவி குலவி யான் மகிழ்வேன் ….
மணிகள் ஒவ்வொன்றும் நாளாக
மரண வலியால் தவிக்கின்றேன் ….

எந்தன் உயிரே வந்து விடு
எனக்கு நீ தான் வாழ்வு கொடு ….
நினைத்தேன் உன்னை மறக்கவில்லை
நினைவே இழந்தால் இறந்திடுவேன் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -21/09/2017

Home » Welcome to ethiri .com » நீ மறந்தால் … நான் இறப்பேன் ….!

Leave a Reply