நீ பிள்ளையா
அழகான ஊருக்கும்
ஐயாறு பிள்ளைக்கும்
முதலான தந்தை
முன் என்ன தலை வெட்டு …?
காதில கம்மலும்
கரட்டி ஓணான் தாடியும்
குண்டி காட்டும்
குளியாத சட்டையும் …..
உலக அழகு என்று
ஊர் சுற்றும் காவாலி ….
போலான பிள்ளைக்கு
பொறுப்பெங்கே கூடி வரும் ..?
தான் உண்ணும் வேளையில்
தான் பெற்றது அழுகுதென்று
உண்டதை எறிந்தோடி
உயிர் காத்த அப்பனை …..
வழி மறந்து போனவனே
வாழ்ந் தென்ன கண்டாய் ..?
முதியோர் இல்லத்தில்
முன் எறிந்து ஏன் போனாய் ..?
எதிர் காலம் ஒன்றுண்டு
என்பதை மறந்தின்று …
உலவி திரிபவரே
உது போல நிலையுனக்கும் கான் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/01/2018
வன்னி மைந்தன் கவிதைகள்