நீ எனக்கு வேண்டாம் …!

Spread the love

நீ எனக்கு வேண்டாம் …!

கொரனோ காதலா ..? – என்னை
கொன்று போக வா
விருது வாங்கி தாரேன் – என்னை
விடுதலை செய்ய வா

இரண்டாம் அலையாக
இதயம் நுழைய வேண்டாம்
நுரை ஈரல் கருக்க – நீ
நுழைந்து விட வேண்டாம்

அன்று முதல் நாள்
அத்தனை ஆனந்தம்
இன்று உடைந்தது
இதயம் சிதைந்தது

வேரை அறுக்க வா
வேதனை தொடுத்தாய் …?
இதயம் கிழிக்க வா
இத்தனை செய்தாய் …?

மறந்து விடுகிறேன்
மரணம் தந்திடு …
உந்தன் செயல் வெற்றியே
உள்ளம் மகிழ்ந்திடு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -05-10-2020

Leave a Reply