என் மனதில் நீ இல்லை ….!

Spread the love

என் மனதில் நீ இல்லை ….!

தொடர் வண்டி வேகத்திலே
தொட்டு பார்க்க வருபவளே …
மிதி வண்டி சாலையிலே
மிதித்து போக எண்ணுறியோ …?

கூடை பந்தாய் எனை எறிய
குயிலே என்ன கூடாது …
மயிலை போல தோகை விரித்தா
மயங்கி வீழ மாட்டாது ….

புல்லை மேயும் பனித்துளியாய்
புன்னகை வீச கூடாது ….
பல்லை காட்டி நீயும் வந்தா
பாவை நானும் மடிவேனோ …?

உன் எண்ணத்தில் மாற்றமில்லை
உன்னை எண்ண மாட்டேனே …
தங்க தேர் உடல் அழகில்
தங்கமே மயங்கிட மாட்டேனே …

என்ன செய்தால் நான் வருவேன் – உன்
எண்ணத்தில கண்டு பிடி …..
கண்ண குழி சிரிப்பழகே
கண்டு பிடி – நல்ல நண்டு பிடி ….

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -01/04/2019

Leave a Reply