நீறாகிப் போன நினைவுகள்
நீறாகிப் போன நினைவுகள் எல்லாம்
இன்று நட்ட மரம்போல
எழுந்து நிமிர்ந்து நிற்குமய்யா உங்கள் பெயரை சொன்னால்….
விழுந்து படுத்த
கிழடுகள் கூட இன்று
நாட்டு நடப்பென்னவென்று
தலைப்புச் செய்தியை தேடுமய்யா உங்கள் பெயரின்
நினைவுக்கு பின்னால்…..
எழுந்து ஓடமுடியாத ஒற்றைக் காலை
இழந்தவரும்
ஏதோ
ஓர்மம் கொண்டு
சாதிக்கத் துடிக்கின்றார்
நம்ப முடியவில்லை என்னால்….
பழுத்த உதிர்ந்த இவைகளுமின்று
சொல்வது என்ன
நாம் சருகாகிப் போனாலும்
மண்ணுக்கு உரமாவோம்
மீண்டும் மீண்டும்
மன்னா உமது பெயர்
சொல்லும்
கார்த்திகை மலராவோம்
சாத்தியமான சத்தியம்
என்று விடுதலை தேடி
விரைந்து ஓடும்
மேகத்தைப் போல
உலகமெங்கும்
பரந்து கிடக்குது
மேதகு புகழ்
தெளிந்த நீல
வானத்தைப் போல…..
வணக்கம் சொல்லி
வாழ்த்துகள் சொல்ல
இங்கு வார்த்தைகள்
எல்லாம் மலர்களாய்
மாறும் மாயமென்ன
கார்த்திகை
இருபத்தாறு
கடவுள் அமைத்து வைத்த
காலத்தின் மேடையில்
என்றும்
காட்சியின் நாயகன்
எழுவது இன்று என்று
எழுந்து நின்று
தொழுவது
அகிலம் எங்கும்
தமிழனின் கரம்
வாழ்ந்து பார்த்தது
எங்கள் வரம் 💐🙏
26/11/2024