நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு
Spread the love

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலுக்கமைய திகன, அம்பகோட்டே பகுதியில் இருந்து இரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அடையாளம் காண முடியாத அளவிற்கு அழுகிப் போயுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்தெனிய பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில், தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.