நித்தம் நீயே வா

Spread the love

நித்தம் நீயே வா

முரண்டு பிடிக்கும் உன் உடம்பை
முள்ளு மீசை கொண்டு குற்றவா ..?
என் எச்சி பட்டே உன் உடலை
எந் நாளும் நனைக்கவா ..?

இடையாட்டும் காற்றை பிடித்து
இன்று சிறை வைக்கவா ..?
நனையாமல் நீ செல்ல
நானும் குடை பிடிக்கவா ..?

தலையாட்டும் கூந்தலை
தாங்கமே தந்திட வா
தாலாட்டு நான் பாட
தங்கமே உறங்க வா

முன் பகலை இரவாக்கி
முழு நிலவில் தோய்க்கவா ..?
உன் சாமி நான் ஆனேன்
உயிரே நித்தம் வணங்க வா ….

ஆகாய சூரியனாய்
அன்றாடம் வருபவளே
நித்தம் என் உறக்கத்தை
நீயே கலைக்க வா …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 15-08-2021
http://ethirinews.com/

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply