நாயின் வாயில் சிசுவின் சடலம் – அதிர்ச்சியில் பொலிஸ்

Spread the love

நாயின் வாயில் சிசுவின் சடலம் – அதிர்ச்சியில் பொலிஸ்

நிவித்தகல பாரவத்த பிரதேசத்தில், சிசுவொன்றின் சடலத்தை நாய்

கௌவ்விச் சென்றுள்ள நிலையில், அதனைப் பெண்ணொருர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மேற்படி பெண் இறப்பர் தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருந்தபோது, சிசுவொன்றின் சடலத்தை,

நாய் கௌவ்விச் செல்வதை அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர் நாயைத் துறத்திச் சென்றுள்ள நிலையில், சிசுவின் சடலத்தை

போட்டுவிட்டு நாய் ஓடியுள்ளது. இதனையடுத்து, பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த

பொலிஸார், சிசுவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

மேற்படி சிசு, பிறந்து இரண்டு நாள்களாக இருக்கலாம் என்றும் பிறந்தவுடனேயே பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டிருக்கலாம்

என்றும் சந்தேகிக்கும் பொலிஸார் சிசுவின் தாயைக் கைது

செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உருக்குலைந்த நிலையிலேயே சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply