நகை திருடிய பெண் கைது

நகை திருடிய பெண் கைது
Spread the love

நகைகள் திருடிய பெண் கைது

நகை திருடிய பெண் கைது, யாழ்ப்பாணம் கன்னா திட்டி காளி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்திருந்த மக்களிடத்தில் நகை திருடிய பெண் கைது .

பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் பல பவுன் நகைகளை கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ்

யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ் குற்ற பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் திருட்டில் ஈடுபட்டிருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .

பெண்ணை கைது செய்து, யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுதே ,பெண்ணின் உள்ளாடைகளுக்கு இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போலீசார் விசாரணை அடுத்து தற்பொழுது மேலதிக விசாரணைகள்மேற்கொள்ள நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம்

யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு செல்லும் மக்களின் நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம் திட்டமிட்டு நகர்ந்து வருகின்றது .

அதே போலவே பேருந்துகளிலும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் நூதனமான முறையில் இடம்பெற்று வருகிறது .

அதனை அடுத்து தற்பொழுது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

நகைகளை இழந்தவர்கள் அந்த நகைகளை காவல்துறையில் சென்று பெற்றுக்கொள்ள முடியுமா என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.