தோசை சப்பாத்தி பூரிக்கு ஏற்ற சூப்பரான கிரேவி இப்படி சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க

Spread the love

தோசை சப்பாத்தி பூரிக்கு ஏற்ற சூப்பரான கிரேவி இப்படி சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க

தோசை சப்பாத்தி பூரிக்கு ஏற்ற சூப்பரான கிரேவி இப்படி சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க

இந்த உருவிளைக்கிழங்கு கிரேவி ,தோசை சப்பாத்தி பூரிக்கு, செமையா இருக்கும் .

நமக்கு ஏற்ற காரத்தில ,நாமே வீட்டில் உடனடியா, பத்து நிமிடத்தில் செஞ்சு அசத்தலாம் .

அப்புறம் என்ன கவலை .

குக்கரில் நான்கு உருளைக்கிழங்கை அவிய வைத்து ,தோல் உரித்தெடுங்க ,அப்புறம் பெரிய துண்டுகளாக வெட்டுங்க .

எண்ணையை சட்டியில் ஊற்றி ,அதுக்குள்ளே வெட்டிய உருளை கிழங்கை போட்டு வறுத்து எடுங்க .

இரண்டு நிமிடம் கழித்து ,அதை எடுத்திடுங்க .

அந்த சட்டியில் உள்ள எண்ணைக்குள்ள வெங்காயம் ,கராம்பு ,சோம்பு எல்லாம் போட்டு வதக்குங்க .
வெங்காயத்துடன் இஞ்சி ,கருவேப்பிலை போட்டு வதக்குங்க

இப்போ கிரேவிக்கு தேவையான உப்பு போடுங்க .

வெங்காயம் வதங்கி வந்ததும் ,மஞ்சள் தூள் ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்திடுங்க .அதோட கொஞ்சம் மல்லி தூள் சேர்த்து வதக்குங்க .

வதங்கி வந்ததும் ,வேண்டியளவு தண்ணி ஊற்றுங்க ,அதை நல்லாய் கலக்குங்க ,
அப்புறம் ,அதுக்குள்ள தயிரை போட்டு நல்லாய் கலக்கி விடுங்க .

இப்போ பொரிச்சு வைத்த உருளை கிழங்கை அதற்குள்ள போடுங்க .

அப்டியே கலந்து விட்டு .3 நிமிடம் வரை அடுப்பில வையுங்க .,
கொஞ்சம் வற்றி வரட்டும் ,

கொத்த மல்லி இலையை போட்டு கலக்குங்க .தோசை சப்பாத்தி பூரியோட சேர்த்து சாப்பிடுங்க .செமையா இருக்கும் .
வாசமான செமையான உருளைக்கிழங்கு கிரேவி ரெடியாச்சு .

அப்புறம் என்ன மக்களே இதுபோல நாங்களும் நாள் தோறும் நம்ம வீட்டில சமையல் செய்து அசத்தலாம் .

நண்பர்கள் கூடட ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு சுவைக்கலாம் .இப்படி ஒன்றாக கூடி உணவு சாப்பிடுதல் எம்புட்டு சுகம் தெரியுமா .இன்றைய சமையல் சுகமான சமையலாச்சு .

Leave a Reply