தொலைந்து போன வசந்த வாழ்வு

Spread the love

தொலைந்து போன வசந்த வாழ்வு

பள்ளி கூட வாழ்வு போல ஒண்ணு வருமா ?
பள்ளியில படித்தார் கண்டால் கண்ணு தாங்குமா ..?
ஒண்ணாக படித்தாருடன் ஒண்ணா பேசல ..
ஓயாத அலையாக அவரு நம்ம நினைவில ,…

காலம் பல கடந்தாலும் கண்டா போதுமே …
கட்டி தழுவி கண்ணுதானே கலசம் பேசுமே …,
வெள்ள மனசில் என்றும் தானே கள்ளம் இல்லையே …
வெருளி சிந்தை நெஞ்சு ஓட ஒண்ணும் இல்லையே …

பிரிந்த போது தானே பிரியம் பிறந்ததே
பிரிய முன்ன வந்திருந்தா சொந்த மாகுமே ….
மனதின் ஓரம் வாழும் காதல் சொல்ல முடியுமோ ..? ..
மணம் முடித்த பின்னர் கண்டால் நெஞ்சு ஆறுமோ ..?

தொலைந்து போன வசந்த வாழ்வு
தொலைந்து போன வசந்த வாழ்வு

நம்ம மனசில் உள்ளதை நாம சொல்லல -அஞ்சி
நாம் நடந்த காலம் எண்ணி வாழ்வு சிரிக்குதே …
புத்தி இல்லா காலத்திலே புதுசா திரிந்தோம் – இன்று
புத்தி தெரிஞ்சு தெளிஞ்ச போது புண்ணாய் மனசு வலிக்குதே …

ஆராரோ என்று தானே அன்று திரிந்தோமே
அறிவு பிறந்த போது அழுது தொலைத்தோமே …..
இது தானோ நமக்கு வாழ்வாய் ஆச்சுதோ ?
இதை எண்ணி இதயம் தானே சோகம் ஆச்சுதே …

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம்24,08,2017
நமது பள்ளி வாழ்வை எண்ணியபோது …..!

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply