தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை

தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை
Spread the love

தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை

தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை ,இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (20) கூடுதல் தொலைதூர சேவை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தனியார் பேருந்து ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கவுள்ளதால் தனியார் பேருந்து சேவைகள் குறையாளம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.