தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil
Spread the love

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil ,தேங்காய் அப்பால் செய்வது எப்படி .

இந்த தேங்காய் அப்பம் செய்முறைக்கு போகலாம் வாங்க .

ஒரு கிலோ அளவு பச்சரிசி எடுத்துக்கோங்க ,இப்ப இத தண்ணி சேர்த்துட்டு ரெண்டு மூணு டைம் நல்லா கழுவடி எடுத்திடுங்க .

அப்புறமா 12 மணி நேரத்துக்கு இதை ஊற வச்சுக்கோங்க .இந்த ரெசிபி கிட்டத்தட்ட அதிரசம் செய்வோம் இல்ல அதே மாதிரி தான்.

தேங்காய் பணியாரம் செய்வது எப்படி|how to make Coconut Sweet in Tamil

ஆனா இதுல வந்து தேங்காய் சேர்த்து பண்ணுவாங்க அதனாலதான் இது வந்து நம்ம தேங்காய் பணியாரம்னு சொல்றோம்.

12 மணி நேரம் இது நல்லா ஊறவெச்சு எல்லாம் இப்ப பாருங்க இது நல்லா ஊறிருக்கு .இப்போ தண்ணிய வடிச்சிட்டு இது ஒரு கிளீனான ஒயிட் கிளாத்ல காய வச்சுக்கோங்க.

வெயில் எல்லாம் காய வைக்க தேவையில்லை ஒரு பத்து நிமிஷத்துக்கு கொஞ்சம் போதும்.

10 நிமிஷத்துக்கு அப்புறமா நம்ம கைல அரிசியை தொட்டோம்னா லேசா இதுபோல ஓட்டணும் ஆனா தண்ணி இருக்க கூடாது ,இதுதான் கரெக்டான பக்குவம்.

இந்த அரிசி எடுத்து ஒரு மிக்ஸி ஜார்க்கு சேர்த்துக்கோங்க, சேர்த்து எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு பைன் பவுடரா அரைச்சு எடுத்துக்கோங்க .

அரைக்கும் போதே இது கூட ஒரு ரெண்டு மூணு ஏலக்காய் சேர்த்து அரைச்சிக்கோங்க .

அப்போ கரெக்டா இருக்கும், இப்ப பாருங்க ஃபைன் பவுடரா அரைச்சு எடுத்தாச்சு.

இதை இப்போ அரிச்சு எடுத்துக்கணும் ,கொஞ்சம் கூட கப்பி இருக்க கூடாது. நம்ம பைன் பவுடரா ஜலிச்சு எடுத்துக்கணும், அப்பதான் சாப்பிடும்போது ரொம்ப சாஃப்டா டேஸ்டியா இருக்கும்.

பாகு காய்ச்சுவது எப்படி |how to cook Coconut paaku

இப்ப இந்த அரிசி மாவு ஒரு ஓரமா இருக்கட்டும் .அடுத்த நம்ம பாகு காய்ச்ச ஆரம்பிச்சிடலாம் .

அதுக்கு ஒரு அடி கனமான பாத்திரத்துல முக்கால் கிலோ அளவு வெல்லம் எடுத்துக்கோங்க .

ஒரு கால் கிளாஸ் அளவுக்கு மட்டும் தண்ணி சேர்த்துக்கோங்க போதும், இந்த அளவுக்கு தான் தண்ணி சேர்க்கணும் ,தண்ணி அதிகமா சேத்துரக்கூடாது .

இப்ப வெள்ளம் முழுமையாக கரையறது வரைக்கும் வெயிட் பண்ணுங்க .அதுக்கு அப்புறமா கொதி வந்ததுக்கப்புறமா தான் நம்ம பாகு பதம் செக் பண்ணனும்.

How to cook Thengai Appam |Coconut Sweet in Tamil

வெள்ளம் முழுமையாக கரைஞ்சிருச்சு, வடிகட்டிக்கோங்க அப்பதான் கரெக்டா இருக்கும் பாகுபதம் வந்ததுக்கு அப்புறம் நம்ம வடிகட்ட முடியாது.

இப்ப பாருங்க நல்லா கொதி வர ஆரம்பிச்சிருக்கு, நம்ம பாகு பதம் செக் பண்ணி எல்லாம் அதுக்கு ஒரு சின்ன பவுலில் தண்ணி எடுத்துக்கோங்க. அதுல இந்த பாகை விட்டு பாருங்க .நம்ம கையில எடுத்து உருட்டும் போது சாப்டான பால் பக்குவத்துக்கு வரணும் .

நம்ம கையில் எடுக்கும் போதும் எடுக்குறதுக்கு வருது ,எடுத்துட்டு நம்ம உருட்டுவதற்கும் கரெக்டா வரணும் .

இந்த மாதிரி இது வந்து பர்பெக்ட்டான கன்சிஸ்டெண்சி இந்த ஸ்டேஜ்ல ஸ்டவ் ஆஃப் பண்ணிடுங்க .

இப்ப இந்த பாகு கூட நம்ம தேங்காய் துருவல் சேர்க்க போறோம் .நான் ஒரு முழு தேங்காய் சின்ன சின்ன பீசா கட் பண்ணிட்டு மிக்ஸில போட்டு அரைச்சு வச்சிருக்கேன்.

How to cook Coconut Sweet in Tamil

இது வந்து ஒரு முழு தேங்காய், ஒரு கிலோ அரிசிக்கு ஒரு முழு தேங்காய் கரெக்டா இருக்கும் ,நீங்க துருவீட்டும் சேர்க்கலாம் மிக்ஸி ஜாரில் போட்டு அரைச்சிட்டு சேர்க்கலாம் .

ஆனால் தண்ணீர் சேர்க்கக்கூடாது ,அரைக்கும் போது இப்ப நம்ம செஞ்சு வச்சுருக்க பாகு கூட உடனேவே இந்த தேங்காவை சேர்த்து நல்லா கலந்துருங்க .

இந்த ஸ்டெப் வந்து ரொம்ப பாஸ்டா பண்ணனும் இது போல கலந்துரனும் ,கலந்து நம்ம ஏற்கனவே அரைச்சு வச்சிருக்கோம்ல அரிசி மாவு.

அதையும் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து இதுகூட கலக்க ஆரச்சிடனும், கொஞ்சம் கூட கட்டி படாம பாஸ்டா இந்த வேலைய நம்ம பாக்கணும் .

கொஞ்சம் கொஞ்சமா தான் மாவு சேர்த்து கலந்துக்கணும். அப்பதான் ஈசியா இருக்கும் .

இறுதி நிலைக்கு வந்திட்டோம் ,அடுப்பில கடாய வைத்து இப்போ இதை நன்றாக தட்டையாக தட்டி .பொரித்து எடுத்திடுங்க ,அவ்வளவு தாங்க ,தேங்காய் சுவீட் ரெடியாடிச்சு .

வீடியோ