தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு ,தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடத்தை வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை 6.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது வலது தோள்பட்டைக்கு அருகில் 02 துப்பாக்கிச் சூட்டுக்களுடன் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நகர சபை ஊழியர் ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் பிரதிபலனாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.