துப்பாக்கிச் சூடு களுத்துறையில்

துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
Spread the love

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு களுத்துறையில் ,களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 8 வயது மகள் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (20) இரவு கட்டுகுருந்த புகையிரத நிலைய பொல வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டு கொலை

குறித்த நபர் தனது 3 பிள்ளைகளுடன் தனது வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரி 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.