துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,மாளிகாவத்தை, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு (22) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன் நின்றிருந்த நபர் ஒருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் காயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதுடன், அவர் தெஹிவளை சோல் பீச் ஹோட்டலின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.