துப்பாக்கிகளுடன் மூவர் கைது

துப்பாக்கிகளுடன் மூவர் கைது
Spread the love

துப்பாக்கிகளுடன் மூவர் கைது

துப்பாக்கிகளுடன் மூவர் கைது ,டி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் அந்த துப்பாக்கிகளுடன் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகங்முவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமடில்ல பகுதியில் உள்ள கடை ஒன்றின் மேல் மாடியில் நேற்று இரவு T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது இலக்கம் அழிக்கப்பட்ட டி-56 ரக துப்பாக்கி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கும்பலொலுவ பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, நாவுல, அம்பன, எரிஸ்டன் வீதி பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, ​​உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொங்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 55 வயதானவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் மற்றுமொரு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஏத்திமலை, தோரதுபிட்டிய பிரதேசத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர், ஏத்திமலை பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.