
திருமணம் செய்வோம் வா
பக்கம் பக்கமாக கவிதை எழுதி
படித்து காட்ட வந்தாலும்
வெட்க பட்டு ஓடுறியே
வெருளியாக மாறிரியே
அச்சத்தில் நீ சிரிக்கையிலும்
அத்தனை பல்லும் அழகாச்சு
முத்தமிட முன் மொழியும் – உன்
உதடு இரண்டும் தெளிவாச்சு
சத்தமிடா நீ இருந்தா
சாந்தமாக ஆகிடுவேன்
உத்தரவு நீ கொடுத்தா
உன்னை நான் ஏற்றிடுவேன்
இத்தனை நாள் தவமிருந்தேன்
இந்த ஒரு நாளுக்காய்
இன்றேனும் ஏற்று விட்டாய்
இணைவோம் வா இல்லறத்தில் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-11-2022