திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்
Spread the love

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள் நாவலப்பிட்டி – குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலஸ்பாகை மீனகொல்ல பிரதேசத்தில் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளன.

இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேனும் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப் பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணை களை குறுந்துவத்த பொலிஸார் மற்றும் கைரேகை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.