தாய்லாந்தில் வெடித்த குண்டு

தாய்லாந்தில் வெடித்த குண்டு
Spread the love

தாய்லாந்தில் வெடித்த குண்டு

தாய்லாந்தில் வெடித்த குண்டு, தாய்லாந்தின் யாதப் பகுதியில் கார் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது .

இந்த காருக்குள் மறைத்து வைக்கப்பட்ட குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது .

இதன் பொழுது தாக்குதலை நடத்திய தற்கொலை தாரி உள்ளிட்ட ,ஒருவர் பலியாகி மேலும் 18 மக்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கட்டிடங்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த குண்டுகள், திடீரென வெடித்து சிதறின .

தாய்லாந்தில் கார் குண்டு தாக்குதல்

இதன் பொழுது அந்த கட்டிட தொகுதிகள் பல அழிந்து எரியும் காட்சிகள் காணப்படுகிறது.

தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயினை அணைக்கின்ற காட்சிகள் காணப்படுகின்றன.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றவியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர் .

இந்த தாக்குதலை நடத்தியதற்கு இதுவரை எவரும் உரிமை கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு தாக்குதலை நடத்தியது ஒரு பெண்ணாக உள்ளார் என முதல் கட்ட விசாரணங்களில் தெரிய வந்ததுள்ளது .

தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ,ஏன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கான விசாரணைகள் விசாரணை முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது .

குண்டுவெடிப்பு இடம் பெற்ற பகுதியில் பாரிய சேதம்

குண்டுவெடிப்பு இடம் பெற்ற பகுதிகளை சுற்றி வளைத்து தற்பொழுது போலீசார் மோப்ப நாயுடன் தமது தேடுதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

முக்கிய குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது தாய்லாந்துடைய உளவுத்துறை தீவிரமான செயலாற்றி வருவதாக தெரிய வருகின்றது .

இந்த குண்டுவெடிப்பு சம்பவமானது அந்த பகுதி மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாக அரசு அறிவித்துள்ளது.