உன்னால் தவிக்கிறேன் …!

Spread the love

உன்னால் தவிக்கிறேன் …!

பச்சை வன தோப்புக்குள்ள
பாவி புள்ள நீ நடக்க …
சேலை நுனி தேயுதடி
சேர்ந்து மனம் கரையுதடி …

வீடுடைத்த காற்று போல
வீதியில சுத்துறியே …
காயம் பட்ட என் மனதை
காணமலே நிக்கிறியே …

சேதி சொல்லும் வானொலியே – என்
சேதங்களை காணலையோ ..?
ஆடி புயல் ஆனவளே -என்
ஆள் மனது புரியலையோ .. ..?

விதி செய்த விளையாட்டில்
விளையாடுது வாலிபமே …
முடிவெடுக்க முடியாது
முன் நிலா தடுமாறுது ….

கதிரவன் பார்வையிலே
காயுது புடைவைகளே …
கண்ணே உன் காலடியில்
காத்திருக்கேன் நான் மயிலே ….

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -22/02/2019

Home » Welcome to ethiri .com » உன்னால் தவிக்கிறேன் …!

Leave a Reply