தளம்பி பேசும் தற்கொலை ஒன்று

Spread the love

தளம்பி பேசும் தற்கொலை ஒன்று

வருடம் பிறந்த முதல் நாளில்
வாழ்த்தி பாடிடலாம் – உள்ள
வலிகள் குறைக்கும் நிலை இருந்தால்
வாழ்வு கூடிடலாம் ….

தினம் போடும் நச்சரிப்பால்
திருத்தம் ஏதும் இல்லை
தினமும் கேட்டு மனமும் சலிக்க
வாழ்வே பிடிக்கவில்லை ….

தப்பே இல்லா நீதிக்கு
தண்டனை ஏன் சொல்லு …?
தவறி புரிந்த தவறென்ன
தகுமா பதில் சொல்லு …?

புரியா நிலையில் புண்கள் விதைத்தால்
புன்னகை மலர்ந்திடுமா …?
பூட்டிய சிறைக்குள் வாழும் வாழ்வை
பூலோகோம் ஏற்றிடுமா …?

தளம்பி பேசும் தற்கொலை ஒன்று
தளம்பி பேசும் தற்கொலை ஒன்று

அழுது புலம்பி களைத்தேன் நானும்
ஆயூள் முடித்திடவா …?- நாளை
ஆழ போகும் நாளில் உனக்கு – எந்தன்
அருமை உணரத்திடவா …?

வீணாய் மூட்டும் சந்தேகம் – உன்னை
விதவை ஆக்கிடுமே
விரைவில் உணர மறந்தால் – நிலை
விரைவில் கூடிடுமே ……!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -01/01/2018

    Leave a Reply