தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
Spread the love

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ,கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளமையால் குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.