தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்
Spread the love

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்

மருத்துவர் அர்ச்சுனாவை முகநூலில் தொடரும் ஆதரவாளர்களாகிய எங்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

திங்கள் இரவு சுமார் 9pm, மருத்துவர் அர்ச்சுனாவின் முகநூல் செயல் இழந்து போகிறது.


முகநூல் ஆதரவாளர்கள் பரபரப்பாக தொடங்கிறார்கள்.
தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி நடக்கிறது.
தொலைபேசியும் துண்டிக்கப் பட்டுள்ளது. பரபரப்பு உச்சத்தை தொடுகிறது.

யாரிடம் கேட்பது? யாரை தொடர்பு கொள்வது? எல்லோருக்கும் படபடப்பு.

முகநூல் நண்பர்களாக இருந்தாலும் ஏற்கனவே அறிமுகம் இல்லாதவர்கள் கூட ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள்,

WhatsApp, Tik Tok குழுக்களில் இருப்பவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு கருத்துக்களை பரிமாறுகிறார்கள்,

நெருங்கிய தொடர்பில் உள்ள நண்பர்கள் யார்? என்ற தேடல்,

“ஐயோ டொக்டருக்கு ஏதோ ஆகிவிட்டது, யாராவது அவரை போய் பாருங்கள், காப்பாற்றுங்கள் என்ற கதறல்கள்”,

பொலிசால் கைது செய்யப் பட்டாரா?

ஏதாவது குழுக்களால் கடத்தப்பட்டாரா?

உயிரோடு இருக்கிறாரா, இல்லையா?

ஆயிரம் கேள்விகள், குழப்பங்கள்…

வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் உள்நாட்டு நண்பர்களுக்கு அழைப்பு எடுக்கிறார்கள்…

இந்த இடத்தில்தான் தம்பி ஐயா மாட்டுப் படுகிறார்…

போனுக்கு மேல் போன்,

“ஐயா டொக்டர் அர்ச்சுனாவை காணவில்லை ஐயா, ஒருக்கால் போய் பாருங்க, எங்க இருக்கிறார், என்ன நடந்தது ஒண்டும் தெரியவில்லை, ஒருக்கா போய் பாருங்க ஐயா”

கதறல்கள்…

சுமார் இரவு 10:00 மணி, வயதான அந்த மனிதர் மருத்துவர் அர்ச்சுனாவை தேடி புறப்படுகிறார்…..
தம்பி ஐயாவின் தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது…

எங்களுக்கு இருந்த பரபரப்பை நாம் அவர்மேல் கொட்ட, அவற்றை சுமந்து கொண்டு ஐயா போகிறார்…

ஆனால் சாவகச்சேரி மருத்துவமனையில் நின்ற ஊழியர்களுக்கு அந்த பரபரப்பு இல்லை,
காரணம் அர்ச்சுனாவின் முகநூல் அவர்களால் கவனிக்கப் படவில்லைபோல் உள்ளது,

மேலும் சற்று முன் எப்போதும்போல அவர் காரில் வந்து இறங்கி, விடுதிக்கு போனதை நேரடியாக பார்த்திருக் கிறார்கள்.
அதன் காரணமாக அங்கிருந்த ஊழியர்கள் நிலமையை சாதாரணமாக கையாள முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் தொலைதூரத்தில் இருந்து கொண்டு நிலமையை நேரடியாக பார்க்க முடியாத Dr.அர்ச்சுனாவின் அன்பு உறவுகளுக்கு பதட்டம் தணியவில்லை,
இறுதியில் ஏதேதோ நடந்து முடிகிறது.

பல நாட்கள் சரியான ஓய்வு உறக்கம் இல்லாத நிலையில் அன்று உள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த Dr.அர்ச்சுனாவுக்கு வெளியில் நடந்த இந்த கலோபரங்கள் எதுவும் தெரியாது.

ஏதோ சத்தம் கேட்டு திடீரென கண்முழித்த போது கதவை உடைத்துக் கொண்டு காவலர்கள் உள்ளே நின்றதை பார்த்து திகைத்து போகிறார் மருத்துவர்….

இதில் தம்பி ஐயா சிறு சிறு தவறுகள் விட்டுள்ளார் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன்.
அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதையும் முழுமையாக ஏற்கிறேன்.
அந்த தவறுகள் நிச்சயம் மன்னிக்கப்பட வேண்டியவையே!

இந்த நேரத்தில் நாம் தம்பி ஐயாவுக்கு ஆதரவாக நிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவருடைய கட்சி, கொள்கைகள் சார்ந்த பழைய தவறுகள் எதுவும் இங்கே பொருத்தப் படுவது ஞாயம் இல்லை என்பது என்கருத்து.

அதே வேளை இரவிரவாக நித்திரை கொள்வதற்குகூட விடாமல் நடுச்சாமம் கடந்து டிக் டொக் உரையாடல்களுக்கு Dr.அர்ச்சுனாவை அழைக்கும் வன்னி மைந்தனின் செயல் தவறானது என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

வெளிநாட்டில் இருப்பவர்களை விடவும் உள்நாட்டில் இருக்கும் மக்களோடு அதிக உறவை வளர்க்க நேரத்தை செலவிடும்படி என் அன்புத் தம்பி Dr. அர்ச்சுனாவை கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு வெளிநாட்டில் வாழும்
அன்பு +அக்கறை உள்ள
Dr. அர்ச்சுனாவின் அக்கா..இவ்வாறு அர்ச்சுனா முக நூலியில் வெளியிட .பட்டுள்ளது

இதற்கு எனது கருத்து கீழ்வருமாறு .அமைகிறது

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் காணியானது பறிக்க படும் நிலையில் ,வைக்க படும் பொறி ,
ஆரம்பமாகும் சம்பவங்கள் .திரளும் மக்கள் கூட்டம்

அக்கா வன்னி மைந்தன் ஆகிய எம் மீது வைத்த கருத்து தவறு என்பதையும் அதன் உள்ளார்ந்தம் எது என்பதை புரியமுடிகிறது ,மக்கள் சேவைக்கு வந்தவன் நேரத்தை கருத்தில் கொள்வதில்லை ,தனது நோக்கத்தில் குறியாக இருப்பான் .

இந்த சம்பவம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் மக்கள் பலம் , செயல்பாடுகள் கண்டு ஆதிக்க சமூகம் அலறியுள்ளது நாம் அறிவோம் .

.இது அர்ச்சுனாவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி .அர்ச்சுனா எமக்காக இருக்கும் வரை அவருக்கான ஆதரவு வன்னி மைந்தன் ஆகிய என்னால் ,எம் டிக் டாக் அணியினரால் வழங்க படும் ,எமது எதிரி இணையமும் களத்தில் நிற்கும் ,

களத்தை கண்டவர்கள் நாங்கள் ,சரித்திரம் படைக்க வந்திருக்கும் சாதனையாளன் வீர மகன் மக்கள் நாயகன் அர்ச்சுனவோடு நான் நிற்பேன் .

காலம் பலவிடயங்களை பகிரும் பொழுது நம் உயிரோடு இருக்க மாட்டோம் ,வரலாறு அப்படி தான் காணப்படுகிறது நன்றி –

நட்புடன் -வன்னி மைந்தன்