தமிழ் மக்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் – படங்கள் உள்ளே

Spread the love

மீண்டும் வாக்களித்த தெரனியகல நூரி தோட்ட மக்கள் அச்சத்தில்
இராணுவ முகாம் அகற்றபட்டமை இந்த நிலமைக்கு காரணம்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று (16) கேகாலை மாவட்;டம் தெரனியகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நூரி தோட்டத்தில் வாக்களிக்க சென்று திரும்பிக் கெண்டிருந்த ஆர். பிரகாஷ் என்பவரை தாக்கி போத்தலால் குத்தி கையில் காயப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து இவர் கைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது விடு திரும்பி உள்ளார். தொடர்ந்து இந்த தோட்டத்தில் குறித்த சில வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த சம்பவத்துடன் தொடர்பு உடைய சந்தேக நபர்கள் ஆறு பேர் கைது செய்யபட்டு நிதிமன்றில் ஆஜர்படுத்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு மீண்டும் 25.11.2019 இடம் பெறவுள்ளது.

இந் நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் இந்த மக்களின் நாளாந்தம் செயற்பாடுகளுக்கு அச்சுருத்தலாகவும் இடையூராகவும் இருந்து வருவதினால் மக்கள அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கும் புகார் செய்யபட்டு உள்ளது.

குறிப்பாக இந்த பிரதேசத்தில் அடிக்கடி இவ்வாறன சமூக முரண்பாடான விடயங்களும் இன முரண்பாடன விடயங்களும் அன்மை காலம் தொட்டு நடந்து வருகின்றது. இதனை இல்லாது ஒழிக்கவும் பாதுகாப்பை உறுதி செயய்யவும் முன்னைய காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் விஷேட இராணுவ முகாம் ஒன்றினை நிறுவி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தொடர்ந்து வந்த அரசாங்கம் அதனை அகற்றபட்டமையினாலயே இந்த பிரச்சனை தோன்றி உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தும் அதே நேரம் மீண்டும் அந்த இராணுவ முகாமை நிறுவுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் தற்போது ஜனாதிபதியாக உள்ள அதே கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு கடிதம் மூலம் நகல் ஒன்றினையும் அனுப்பி உள்ளனர்

இந்த நகல் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

தெரனியகல பிரதேச செயலகம் பஸ்னாலக கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட நூரி தோட்டத்தில் சுமார் 07 வருடத்தற்கு முன்னர் தோட்ட முகாமையாளர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை சம்வத்தை தொடர்ந்து. சம்பவத்துடன் தொடர்புபட்ட 18 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கபட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த தோட்டத்தில் பாதுகாப்பு நிமித்தம் விஷேட இராணுவ முகாம் ஒன்றினை நிறுவி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். தொடர்ந்து வந்த அரசாங்கம் அதனை அகற்றியது. இந் நிலையிலேயே இவ்வாறான பிரச்சனைகள் தோன்றி வருகின்றன.

இந்த காலப்பகுதியில் தோட்டத்திலும் தோட்டத்திறகு அண்டிய கிராம பகுதியிலும். பாதுகாப்பு உறுதிப்படுத்தபட்டதுடன். சட்டவிரோத மதுபான உற்பத்தி¸ சட்டவிரோத மரம் வெட்டுதல்¸ கற்பழிப்புக்கள்¸ கள்ளத்தனமான மணல் விற்பனை¸ போன்ற சட்ட விரோதமான செயற்பாடுகள அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததுடன் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் மேற்படி சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தும் இப்பிரதேசத்தில் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாகவே மேற்படி தேர்தல் காலத்தில் ஏற்பட்ட பிரச்சனையுமாகும். இதனை தற்போது இந்த நாட்டிற்கு புதிய ஜனாதிபதியாக உள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் கவனத்திற் கொண்டு நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இருந்த பாதுகாப்பை மீண்டும் பெற்று தருமாறும் சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எங்களின் வாழ்வில் ஒளியோற்றுமாறும் மக்கள மேலும் பெற்றுத்தறுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply