தமிழ் சினிமாவில் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – நடிகை ஹனிரோஸ்

Spread the love
தமிழ் சினிமாவில் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – நடிகை ஹனிரோஸ்

தமிழ் சினிமாவில் விக்ராந்த் ஜோடியாக முதல் கனவே, ஜீவா நடித்த சிங்கம்புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன்

உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். இப்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹனிரோஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- சினிமாவில் ஒருவரை ஒருவர் அறிந்திருப்போம்.

நமக்கு எல்லோரையும் தெரியும். நான் ஒரு கதையை தேர்வு செய்தாலும் படத்தில் கமிட் ஆனாலும் முதலில் இயக்குனர் வினயன் சாரிடம் தான் சொல்வேன்.

அவர் எப்படி வழி காட்டுகிறாரோ அதையே பின்பற்றுகிறேன்.

ஹனிரோஸ்

ஆரம்பத்தில் சில தமிழ்ப் படங்களில் நடித்தேன். அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தேன்.


மானேஜர்கள் இந்த படத்தில் நடியுங்கள் என்று சொல்வார்கள்.

இதில் நடித்தால் பெரிய இடத்துக்கு போகலாம் என்பார்கள். அதை நம்பி கமிட் ஆவோம். படம் ஆரம்பித்த பின் தான் அது ஒரு விதத்திலும் உதவாது என்பது தெரியும்.

சிலர் மனரீதியாக துன்புறுத்த தொடங்குவார்கள் அது தாங்கமுடியாததாக இருக்கும். எல்லாவற்றையும் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply