தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்

தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்
Spread the love

தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்

தெரணவில் உருவான பிரபல நட்சத்திரம், சமீபத்தில், நாட்டின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றுள்ளார்.

தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 8 இல் பங்கேற்று மிகவும் பிரபலமான பாடகர் ரவி ​ரோய்ஸ்டரின் பாடல் இந்தியாவில் ஒரு திரைப்படத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

“பஸ்ஸ” என்ற சிங்கள பாடலைக் கேட்கும் போது, ​​புதிய தலைமுறை பிரபல பாடகர்களான ரவி ரோய்ஸ்டர் மற்றும் திமிதிரியே நினைவுக்கு வருவார்கள்.

இந்தப் பாடலை யூடியூப்பில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அதன்படி இலங்கையில் அதீத வரவேற்பை பெற்ற பாடல் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

அதாவது பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் சமீபத்திய “ரோமியோ” திரைப்படத்தின் பாடல்களில் ஒன்றாக இந்தப் பாடலைத் தேர்வு செய்ததன் மூலம்.

உலகப் புகழ்பெற்ற மியூசிக் பிரேண்டான திங்க் மியூசிக், இந்தியாவுடன் இணைந்து ரவி ரோய்ஸ்டரின் இந்தப் பாடலை தமிழில் ‘வெத்தல’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

பிரபல நடிகர் விஜய் ஆண்டனி பாடல் வரிகளை எழுதிய நிலையில், தமிழில் பாடும் வாய்ப்பை ரவி ரோய்ஸ்டரே பெற்றுள்ளமை சிறப்பு அம்சமாகும்.

யூடியூப்பில் வெளியான 2 நாட்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது “வெத்தல” பாடல்.

தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 8 இல் பங்கேற்றதன் மூலம் ரவி ரோய்ஸ்டர் புகழ் பெற்றார்.

அதில் 5 இறுதிப் போட்டியாளர்களுக்குள் ரவி ரோய்ஸ்டருக்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு, “ஹமாரா பனவரா” பாடல் உட்பட பல பாடல்களுடன் ரவியால் பொதுமக்களை சென்றடைய முடிந்தது, கச்சேரி மேடையில் தவிர்க்க முடியாத பாடகராக மாறினார்.

அத்துடன் டி.வி. தெரணவில் ஒளிபரப்பான சின்னத்திரை நாடகங்களின் பாடல்களுக்கும் ரவி தனது குரலில் பங்களித்தார்.