தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு- பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது
பள்ளி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி தொடரும்.
- பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளுக்கு தடை தொடரும்.
- பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை
- மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- நிர்வாக பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.
பேருந்துகள்
- புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு தடை.
- சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
- பார்கள் எனப்படும் அனைத்து மதுபான கூடங்களுக்கான தடை தொடர்கிறது.
- தட்டச்சு, சுருக்கெழுத்து, ஐடிஐ உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி.
- திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 20 பேரும் பங்கேற்க அனுமதி.
- பொழுது போக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு
- பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்
- பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்
- கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால், அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும்.