தண்டனை கொடு

Spread the love

தண்டனை கொடு

பாதணி இன்றே பணி செய் என்றான்
பாவி அவனொரு மூடன் – கொடும்
பாதகர் நிலையை புரிந்திடா எண்ணி
பாடியே நின்றான் வேடன்……

தன் அருள் ஒன்றே முன் பொருள் என்றே
தவறி வைத்தான் நன்றோ ..?- நீதி
தழுவல் மறந்து தண்டனை எய்தார்
தகுமோ இந்த ஊழி …?

எம்மொழி உரைத்தான் என்றே எண்ணா
எடுத்தே எறிந்தான் பகைமை ….
தன் நெறி கெட்டு தன் மதி விட்டு
தழுவுமோ விரல் அவர் பாதம் …?

செய் நெறி கெட்ட செயல் நிலையாளர்
செந்தணல் ஆகி எரித்திடு – கொடும்
வெண் சமர் ஆடியே வேண்டும் நீதி
வென்றே உலகை ஆண்டிடு …..

தருகிற தண்டம் தர்மம் கூவும்
தட்டடா தட்டு கதவை …
கொடும் தேளாகியே கொட்டடா கொட்டு
கொடும் விலங்குகள் இங்கு சிதற ….!

  • வன்னி மைந்தன் -( ஜெகன் )
    ஆக்கம் -08-02-2018
    பணி புரிந்த இடத்தில பாதணி எறிந்த
    குற்றவாளியை காப்பாற்றிய முதலாளிக்கு சமர்ப்பணம் …

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply