ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Spread the love

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க குற்றவியல் விசாரணையில் வணிக பதிவுகளை பொய்யாக்கிய 34 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

முன்னாள் அல்லது பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் குற்றத்திற்காக தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
அவருக்கு ஜூலை 11 அன்று தண்டனை நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சட்ட வல்லுநர்கள் அபராதம் விதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு என்று கூறுகிறார்கள்.

இந்த தீர்ப்பை “அவமானம்” என்று கூறிய டிரம்ப், வழக்கை விசாரித்த நீதிபதி மெர்சனை தாக்கியதாகத்தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்ப் எதிர்வரும் நவம்பர் தேர்தலில் ஜோ பிடனை தோற்கடித்து வெள்ளை மாளிகைக்கு திரும்ப வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த வழக்கின் மையத்தில்; இது தொடர்பாக ட்ரம்ப்புடனான பாலியல் ரீதியான என்கவுண்டர் என்று கூறப்படும் ஸ்டோர்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சிகளிடம் ஆறு வாரங்களாக நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 2016 தேர்தலுக்கு சற்று முன்னர் அவருடன் சர்ச்சையில் ஈடுபட்ட முன்னாள்

திரைப்பட நட்சத்திரத்திரமான டானியலை அமைதிப்படுத்துவதற்காக தனது முன்னாள் வழக்கறிஞர் மிஷல் ஹோஹனுக்கு கொடுத்த 130000 டொலர்

அமைதிப் பணத்தை மறைத்ததாக ட்ரம்ப் குற்றம் சாட்டப்பட்டார். 12 நீதிபதிகள் இரண்டு நாட்களாக விவாதித்து ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர் என்று கூறப்படுகின்றது.