டெங்கொழிக்க எங்களின் பங்கு

டெங்கொழிக்க எங்களின் பங்கு
Spread the love

டெங்கொழிக்க எங்களின் பங்கு

சிரட்டை பேணி கோம்பைகளை
நீர் தேங்காமல் வை!
குறட்டை விட்டுத் தூங்க வீட்டைக்
கூட்டிப் பெருக்கனும் உன் கை!

பொலித்தீன் பைகள் யோக்கற் கப்பும்
சூழலுக்கு கேடு!
பொழுது சாய்ந்து தூங்கும்போதும்
நுளம்பு வலை போடு!

அரட்டையடிச்சு அலட்சியமா யிருந்தா
அழிச்சிடும் நுளம்பு!
விரட்டியடிக்க செயற்படனு மென்று
வீட்டார்க்கு விளம்பு!

கிடைத்தற்கரிய உயரிய பிறப்பு
மானிடப் பிறப்பு!
இடத்தை தூய்மைப் படுத்தாவிட்டால்
கிடைப்பதே இறப்பு!

தேங்கும் நீர் தங்கி நின்றால்
டெங்கு ஊதும் சங்கு!
எங்கும் சுத்தம் பேணும் நலனே
எங்களின் பங்கு❗

-பிறேமா(எழில்)-