ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
Spread the love

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று ,2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

‘March 12 Movement’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி இன்று (07) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5 மணிவரை ‘அத தெரண’ மற்றும் ‘அத தெரண 24’ ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும். அத்தோடு, ‘அத தெரண’வின் சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்படும்.

இன்றைய விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ‘சர்வஜன அதிகார’ ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.