ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்
Spread the love

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் ,இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த தினம் இடம்பெற்ற வாக்களிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

 நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டுள்ளஅனுரகுமார திசாநாயக்க வருகையை அடுத்து இலங்கையில் பாரியளவு அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 சாதாரண ஆடையில் தோன்றிய அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் .

இவரது வருகையை அடுத்து நாட்டில் பல்வேறுபட்ட அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் ,லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் காணாமல் ஆக்கப்படக்கூடிய நிலைகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அடித்தட்டு மக்களின் மனங்களை வென்ற அனுரகுமார திசாநாயக்க அந்த மக்களின் அன்புக்குரியவராக இறுதிவரை செயல்படுவாரா என்பதே தற்பொழுது மக்களுக்கு கேள்வி ஆகிறது.

 இவரது பதவியேற்று நிகழ்வு முடிவடைந்தது அடுத்து பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்ற தேர்தலை எப்பொழுது நடத்துவார் என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளதுடன், லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் பதறி கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.