சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு
Spread the love

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு ,சோமாலியா தலைநகரில் இடம் பெற்ற தாக்குதலில் 20 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக சோமாலிய அரச ராணுவம் தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் தமது மக்களிடையே விடுதலைக்காக போராடி வருகின்ற அல்சபா போராளிகள் அமைப்பினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சோமாலிய அரசு அறிவித்துள்ளது.

சோமாலியாவின் 45 வீதத்துக்கு மேற்பட்ட நிலப்பரப்புகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற சோமாலியா போராளிகள் அமைப்பினர்,

தற்பொழுது சோமாலியாவின் தலைநகரை தாக்கி அதனுடைய ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.

இவ்வாறான காலப்பகுதியிலேயே தற்போது இந்த தாக்குதல் தீவிரம் பெற்றிருக்கின்றது .

20 பொதுமக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கும் சோமாலியா அரசு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு போர் காரணமாக சோமாலியா பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ,உணவு இல்லாமல் மாக பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்ற துயர சோகமான நிகழ்வுகளும் சோமாலியாவில் இடம்பெற்று வருகின்றது.

என்னிடம் அதனை கருத்தில் கொள்ளாது மக்கள் மீது போரை தொடுத்து பொருளாதார அமைப்புகளில் வைத்து அந்த மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் தீவிரத்தை தற்பொழுது சோமாலியா அரச ராணுவம் காண்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.