சேரன் குளிர்களி

சேரன் குளிர்களி
Spread the love

சேரன் குளிர்களி

பாட்டுச் சத்தம் கேட்டாலே
நெஞ்சில் பட்டாம்பூச்சி பறக்கும்.
பாட்டி, குழந்தைகள் எல்லாம்
பறந்தோடி வாங்கிக் குடிக்கும்.

ராஜா, லிங்கம், றியோ
தராத சுவையை
சேரன் குளிர்களி தந்தது.
ரோஜாப்பூ வாசமாய்
அவர்கள் சேவையிருந்தது.

றோலுக்க கம்பில்லை
பாலுக்க தண்ணியில்லை
பானுக்க மண்ணில்லை
ஆனால்,
வாழ்வுக்க வசந்தமிருந்தது.

கலப்படமில்லாத வியாபாரம்
களிப்புடன் வாழ்ந்தது சமுதாயம்.
நிழல்படமாய் இதன் நினைவுகள்
நிலையாக எங்கள் நெஞ்சோரம்.

சேரன் பாண்டியன் சுவையூற்று
பேரைக்கேட்கவே பெருகுது
நினைவூற்று அந்த
நேரம் எங்களுக்கு இவையும்
ஆனந்தப் பூங்காற்று.❗

-பிறேமா(எழில்)-