செருப்பு விலை பத்தாயிரம் ஓட்டம்

செருப்பு விலை பத்தாயிரம் ஓட்டம்
Spread the love

செருப்பு விலை பத்தாயிரம் ஓட்டம்

செருப்பு விலை பத்தாயிரம் விலையை கேட்டு ஓட்டம் பிடித்த சீனா தம்பதிகள் .இலங்கையில் நடக்கும் மோசடி ,வெளியான வீடியோ .

இலங்கைக்கு உல்லாச பயணம் வருகை தந்த சீனா நாட்டை சேர்ந்த தம்பதிகள் ,கொழும்பு பெற்றா பகுதியில் உள்ள கடை ஒன்றில், செருப்பு ,பாட்டா வாங்க செல்கின்றனர் .

அப்பொழுது அவரிகளிடன் செருப்பு விலையை கேட்கின்றனர் .ஆசையோடு ஒரு செருப்பு வாங்கி கிட்டு போகலாம் என எண்ணியவர்களுக்கு .

கொழும்பு பெட்டா கடைகளில் உள்ளவர்கள் மோசடியாளர்கள் ,சூத்து மாத்து காரர்கள் என்பது ,அந்த கடைக்காரர் காட்டிய செருப்பு விலையின் மூலம் தெரிய வந்தது .

வெளிநாட்டவரை குறி வைத்து பணம் கறக்கும் கும்பல்

இலங்கை வரும் வெளி நாட்டவர்கள் பலர் இவ்வாறு ,இலங்கையில் உள்ள பல கடைக்காரர்களினால் ,ஏமாற்ற படுவதும் அவை காணொளியாக வெளியாகி ,இலங்கை புகழை ,சீர் கெடுத்துள்ளது .

youtuber வீடியோ பிடித்து கொண்டு உள்ளார்கள் என தெரிந்தும் ,இவ்வாறு ,தாமே புத்திசாலிகள் என இவ்விதம் விலைகளை அதிகமாக கூறி ,மோசடி முறையில் பணத்தை கறக்க நினைப்பது அபத்தமானது .

மிக மகிழ்வாக அன்பான அந்த சீனத்தவர்கள் பேசி கொள்கின்றனர் .பிரதர் என ,.சகோதரரே என சகோதரத்துவத்தோடு அழைக்கும் பொழுது ,இவ்விதம் நடந்து கொள்வது தவறான விடயமாகும் .

மோசடியாளர்களினால் வீழ்ச்சி உறும் இலங்கை உல்லாசப் பயணத்துறை

உல்லாச பயணிகளிடம் இவ்வாறு மோசடி முறையில் அதிக பணம் அறவிடும் நடவடிக்கையால் ,இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடம் ஒருவித அச்சம் காணப்படுகிறது .

அவர்கள் தெருக்கடைகளுக்கு வருவதற்கு அச்சம் கொள்கின்றனர் .அந்த காணொளிகள் கீழே எழுத படும் கருத்துக்கள் அதனை பறை சாற்றுகின்றன .

உல்லாச பயணிகள் வருகை அதிகரிக்க ,இலங்கை பொலிசார் உரிய நடவடிக்கை எடுத்து இதனை கட்டு படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் .

பாட்டா வாங்க வந்து செருப்பை கைவிட்டு ,தப்பினால் காணும் என ஓட்டம் பிடித்த தம்பதிகளை பிடித்து அவர்களது ,கமரா காட்சிகளை அழிக்கும் படி அந்த கும்பல் மிரட்டியுள்ளது .

எங்கே செல்கிறது இலங்கை ..? உல்லாச பயணிகளுக்கு பாதுகாப்பு இது தானா ..?

வீடியோ