சுவிஸ் தூதரக சம்பவம் – பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகிறது HRCSL

Spread the love
சுவிஸ் தூதரக சம்பவம் – பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகிறது HRCSL

இலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதரக அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் பொது மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமாயின் முறையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply